கர்நாடக தேர்தல் : அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டும் ஓபிஎஸ்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : கர்நாடக தேர்தல் : இபிஎஸ்-க்கு போட்டியாக ஒரே தொகுதியில் வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்!!

கடந்த 13 ஆம் தேதி, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் பல்வேறு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தன. இதனிடையே நேற்று, கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை அடுத்து இன்று காலை, அதே புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தொடர்ந்து, தற்போது கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜும், காந்தி நகர் தொகுதியில் K.குமாரும் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.