நாற்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில்
எருது விடும் திருவிழா நடை பெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த விழாவை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
எருதுவிடும் திருவிழா நடைபெற வருவாய் துறை, காவல் துறை, கால்நடை துறை, தீயணைப்பு துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, எருது விடும் திருவிழாவை சிறப்பு செய்தனர். விழாவில் வட்டாட்சியர் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும், விழா குழுவினர் காளைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்ததை அடுத்து எருது விடும் திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி சதீஷ்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
—-ம.ஶ்ரீ மரகதம்







