அங்கன்வாடியில் மேஜை விழுந்து சிறுவன் காயம்!

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் மேஜை விழுந்து சிறுவனின் மூக்கு உடைந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அருகே உள்ள குறும்பிறை ஊராட்சியில் அங்கன்வாடி…

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் மேஜை விழுந்து சிறுவனின் மூக்கு உடைந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம்
அருகே உள்ள குறும்பிறை ஊராட்சியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் பயில்வதாக கூறப்படுகிறது. ஆனால் மூன்று குழந்தைகள் மட்டுமே தொடர்ந்து வருகை தருவதாக்க் கூறப்படுகிறது. அந்த அங்கன்வாடி மையத்தில் பணியாளராக கோமதி என்பவர் பணியாற்றி வருகிறார். மலர்கொடி என்ற சமையல் பெண் ஒருவரும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கோமதி குறும்பிறை மட்டும் அல்லாமல் கணபதிபுரம் அங்கன்வாடி
மையங்களுக்கும் பொறுப்பேற்றுள்ளார். அதனால் ஒரு நாள் குறும்பிரையிலும், ஒரு
நாள் கணபதிபுரத்திலும் கோமதி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள்
வந்துள்ளனர். காலை சுமார் பத்தரை மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த சரவணன்
என்பவரது நான்கு வயது குழந்தை யோவானந்தன் என்ற சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மரத்தலான மேஜை விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தை யோகானந்தின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டி உள்ளது. குழந்தையின்
அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சத்துணவு
சமையல் ஆயா மலர்கொடி ஆகியோர் குழந்தையை சாலவாக்கம் ஆரம்ப சுகாதார
நிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் இது குறித்து உயர் அதிகாரிகளிடமோ, குழந்தையின்
பெற்றோரிடமோ எதுவும் சொல்லாமல் குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் சிறுவன் இரவு முழுவதும் தூங்காமல் வலியால்துடித்துள்ளார், மேலும்
மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையிடம் கேட்கும் பொழுது நடந்த சம்பவங்களை சிறுவன் கூறியுள்ளான்.

அதன் பிறகு சிறுவனின் பெற்றோர் சிறுவனை தனியார் மற்றும் செங்கல்பட்டு அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்ததில் மூக்கில் எலும்பு
உடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. 
—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.