கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மின் கம்பத்தில் மோதி கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மனதை பதற வைத்துள்ளன.நல் வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் லேசான
காயங்களுடன் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் ஜான் மோசஸ்.இவர் கோடை விடுமுறையை முன்னிட்டு தனக்கு சொந்தமான காரில் தனது பெரியம்மா மற்றும் சகோதரி ஆகியோருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.காரில் மூன்று பெண்கள் உள்பட மொத்தம் நான்கு பேர் பயணம் செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு பத்மநாபபுரம் அரண்மனையை
சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.கார் தக்கலை-பத்மநாபபுரம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தப்போது எதிர்பாரத விதமாக சாலையின் இடதுபுறமாக இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் கட்டுபாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி அடுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.உடனடியாக அக்கம்பக்கத்தினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிர்ஷ்டவசமாக அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இச்சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.இவை தற்போது வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
வேந்தன்