இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காண்ப்படுவதால் கடற்கரை
திருவிழா கோலம் பூண்டுள்ளது.
இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தின் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.ஆண்டுதோறும் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆண்டுக்கு முன்று முறை சீசன் நிகழும் கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்று கிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
காந்தி மண்டபம்,விவேகாணந்தர் பாறை,திருவள்ளூர் சிலை எங்கும் மக்களின் தலைகளாகவே காணப்படுகிறது.
திருவள்ளூர் சிலை மற்றும் விவேகாணந்தர் பாறைக்கு இரண்டு படகுகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது முன்று படகுகள் இயக்கப்படுகின்றன.அதிகாலை சூரிய உதயத்தை காண ஆயிரக்கண்க்கான சுற்றுலா பயணிகள் வந்ததால் கடற்கரை முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.கட்டுகடங்காத கூட்டத்தினரால் நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேந்தன்