காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரில் பெற்ற தாயை அம்மிகல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (60)-நீலாவதி(55) தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் அருளாளன்(38),இளைய மகன் யோகா நத்தம்(35) .ஹரிகிருஷ்ணன் அப்பகுதியில் சைக்களில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் அருளாளன் பத்து வருடங்களுக்கு முன்பு டிவிஎஸ் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அருளாளன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் வையாவூர் பகுதியில் உள்ள நீலாவதியின் வீட்டின் கதவு வெகுநேரமாக பூட்டியிருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கதினர் வீட்டை திறந்து பார்த்தப்போது நீலாவதி இறந்து கிடந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள்
காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவருடைய மூத்த மகன் தான் தாய் மீது அம்மிகல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுவதாவது தலைமறைவாக அருளாளனை பிடித்தால்தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.பெற்ற தாயையே மகன் அம்மிகல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
—வேந்தன்