10 முறை சாம்பியனான ப்ராக் லெஸ்னர் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிராக் எட்வர்டு லெஸ்னர் WWE நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் பெயரில் ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் விளையாடி வரும் புகழ் பெற்ற வீரர். தனது 22-ம் வயதில் WWE விளையாட்டுகளில் பங்கேற்க ஆரம்பித்த இவர் 25-ம் வயதிலேயே உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். WWE வரலாற்றில் அனைவரும் மோத பயப்படும் அண்டர்டேக்கர் மற்றும் பிக்ஸோ போன்ற வீரர்களை இவர் வென்று சாதனை படைத்தவர்.
இந்த வருடம் பேக்லாஷ் போட்டியில் ரோமன் ரெய்ன்ஸ் மற்றும் கோடி ரோட்ஸ் ஆகிய வீரர்களுடன் போட்டியிட்ட ப்ராக் லெஸ்னர் முதலில் நன்றாகவே விளையாடினார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த போட்டியில் அவர் தோல்வியை தழுவினார். இந்த போட்டிக்கு பிறகு ரோமன் ரெய்ன்ஸ், கோடி ரோட்ஸ்-ஐ மீண்டும் போட்டிக்கு அழைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து கோடி ரோட்ஸ் மேடையில் ரசிகர்கள் முன்பு பேசினார். அப்போது அவர் பிராக் லெஸ்னர் தற்போது நன்றாக சண்டையிடும் நிலையில் இல்லை எனவும், அவரது WWE காலம் முடிவுக்கு வரப்போவதாகவும் கூறினார். பிராக் லெஸ்னரின் அடிக்கடி தோல்விகள் அவரது தொழில்முறை வாழ்க்கையை விரைவில் முடிக்க நிர்பந்திக்கக்கூடும் என்று WWE நிர்வாகம் தெரிவித்தது.
WWE மேடையில் தனது கடினமான பல எதிரிகளை தோற்கடித்து, 10 முறை சாம்பியனான ப்ராக் லெஸ்னர், ரெஸ்லி மேனியா 40-க்கு பிறகு ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ப்ராக் லெஸ்னரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. அவர் WWE போட்டிகளில் மேலும் தொடர்வாரா அல்லது தான் கலந்து கொள்ளப்போகும் கடைசி நாளை அறிவிப்பாரா என ப்ராக் லெஸ்னரின் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.







