உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த ஐந்து அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பட்டன்சேரி குளத்தங்கரை தெருவில் தொடர்ச்சியாக…

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வீட்டிற்குள் புகுந்த ஐந்து அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பட்டன்சேரி குளத்தங்கரை தெருவில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வீடுகள் உள்ளன.இந்நிலையில் இன்று திடீரென இங்குள்ள ஒரு வீட்டில் சுமார் ஐந்து அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

இதனை கண்டு பதறிய வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு பத்திரமாக கொண்டு விட்டனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.