கேரளாவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்த யானைக்கூட்டம் அவர்களை தாக்க முயன்ற வீடியோ இணையத் தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் இடுக்கி இந்தியாவின் சுற்றுலாத் தளங்களில் மிக முக்கியாமான ஒன்றாகும். நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில் இன்று இடுக்கி மாவட்டத்திலுள்ள வல்லக்கடவு-கேவி சாலையில் இரு குட்டி யானைகள் உட்பட 5 யானைகளை உடைய யானைக்கூட்டம் ஒன்று அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வழி மறித்து தாக்க முயன்று பின்னர் திரும்பி சென்றது.
இதனை வீடியோவாக பதிவு செய்த பயணிகள் அதனை சமூக வலைத்தளங்களில் இது தற்போது வைரலாகி வருகிறது.
—-வேந்தன்







