மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்து விமர்சையாக கொண்டாடினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெருமாள் மற்றும் நல்லதங்காள் திருக்கோவில். இக்கோவிலானது அருகிலுள்ள உடன்பட்டி,பிரவியம்பட்டி, அகிலாண்டபுரம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
மேலும் திருவிழா அன்று கோவிலின் அருகிலுள்ள கண்மாயில் மீன்களை பிடித்து கொண்டாடி வருகின்றனர்.அதன்படி இந்தாண்டு கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருகிலுள்ள கண்மாயில் ஐந்து கிராமங்களை
சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நெத்திலி,கட்லா உள்ளிட்ட மீன்களை பிடித்து அள்ளிச்சென்றனர்.இதனை காண மதுரை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-வேந்தன்