கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதையொட்டி, தீவிர பரப்புரை மேற்கொண்ட அவர், நான்கு நாட்களாக பல்வேறு அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளுக்கு நேற்று சென்ற அவர், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், வணிக கடைக்காரர்கள் ஆகியோரை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், தாம் வெற்றி பெற்றதும், அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.