#FIFA 2026: போஸ்னியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து…!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா மோதின. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.

இதையடுத்து தொடங்கிய 2-வது பாதியில் சுவிட்சர்லாந்து அணியின் ஜோஹன் மன்சாம்பி 2 கோல்களும், ரூபன் வர்காஸ் கோலும் அடித்தனர். மறுபுறம் போஸ்னியா அணியில் எர்மின் மஹ்மிக் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஷக்கா சிறப்பாக பயன்படுத்தி கோல் அடித்தார். இறுதியாக ஆட்ட நேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.