நடிகர் கமல் ஹாசன் கடந்த 2018 முதல் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.
தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.
மக்கள் நீதி மய்யமானது தனது முதல் தேர்தலான 2019ல் நடாளுமன்ற தேர்தலில் ’டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.







