கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் அருகே ஒரே நேரத்தில் 11 கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்களை பக்தி பரசவத்தில் மெய் மறக்க செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தில் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், செல்லியம்மன் திருக்கோயில், முருகன் கோயில், விநாயகர் கோயில், அய்யனார் கோயில் என மொத்தம் 11 கோபுரங்கள் உடைய கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களில் கடந்த சில நாட்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதற்கென உருவாக்கப்பட்ட யாகத்தில் கணபதி ஹோமம்,விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹீதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கோயில் விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
வேந்தன்








