கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை அமோகம் – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர். கஞ்சநாயக்கன்பட்டி,தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள…

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர். கஞ்சநாயக்கன்பட்டி,தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஆண்டு முழுக்க மண்ணால பொருட்கள் செய்வ்தை தொழிலாளக கொண்டுள்ளனர்.மேலும் சீசனுக்கு தகுந்தாற்போல் அதாவது வெயில் காலங்களில் மற்றும் தை மாதத்திற்கு முன்னதாக மண்பானைகள் செய்வது,திருவிழா காலங்களில் கோயில்களுக்கு தேவையான கரக சட்டிகள்,மண்ணாலான குதிரைகள் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் கார்த்திகை தீபத்திற்கு இரு நாட்களே உள்ளதால் விளக்குகள் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.

மேலும் வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து லோடு கணக்கில் கொள்முதல் செய்ட்வதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேந்தன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.