முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கபட்ட பெண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் அவதியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிரசவத்துக்காக அதிகமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், போதுமான இட வசதியின்றி, பிரசவம் முடிந்த பெண்கள் கண் சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

அங்கும் போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால், பச்சிளங் குழந்தையுடன் தரையில் அமர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 20 படுக்கைகள் இருக்கும் நிலையில், 50 கர்ப்பிணிகள் இருப்பதால் இடவசதியின்றி அவதியடைந்துள்ளதாக மகப்பேறுவுக்காக வந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இடப்பற்றாக்குறையை போக்க, கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் உறவினர்களும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Advertisement:

Related posts

போலி கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் கொள்ளை

Gayathri Venkatesan

சர்தார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Ezhilarasan

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி

Ezhilarasan