முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர்களை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி அல்லது மதுரையில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளிலோ தற்போது சேர்த்துக் கொள்ளலாம் என ஒப்புதல் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு மாணவர்களை புதுச்சேரியில் சேர்ப்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் சூழலுக்கு பொருந்தாது எனக் கூறினார்.

இதனால், மாற்று ஏற்பாடாக மதுரை தேனி, சிவகங்கை, தூத்துக்குடி திருச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களை பிரித்து சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இறுதி முடிவு குறித்து, ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

Vandhana

ஓராண்டு சிறை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட டெல்லி போராட்ட மாணவிகள்

Jeba Arul Robinson

ஏழை நாடுகளுக்கு 0.2% மட்டுமே கொரோனா தடுப்பூசி விநியோகம்!

எல்.ரேணுகாதேவி