முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேனாண்டாள் முரளி படப்பிடிப்பை தொடங்கியுள்ள படக்குழுவினர் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிடம் திரையரங்கு சம்பந்தமாக 10 கோரிக்கைகளை முன்வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால், பழைய முறைப்படி கேளிக்கை வரிவிலக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்

Advertisement:
SHARE

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ezhilarasan

“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan