முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவினர், கறுப்பு உடை அணிந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கறுப்பு உடையில் இன்று காலை வருகை தந்தனர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர்கள், அதன்பின்னர் உறுதிமொழியும் ஏற்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க மற்ற நிர்வாகிகள் தொடர்ந்து ஏற்றனர்.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிரிகளை வெற்றிபெற விடமாட்டோம், ஒன்றுபட்டு எதிரிகளை வென்று காட்டுவோம் என்றும், பொய்வழக்கு போட்டு நம்மை முடக்க நினைப்போரின் ஆணவத்தை அடக்குவோம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். திமுக ஆட்சியில் தண்ணீரும் வடியவில்லை, தமிழர் வாழ்வும் விடியவில்லை என்றும், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் ஆட்டங்களை அடக்குவோமெனவும் சூளுரைத்தனர்.

நீட் ரத்து, கல்விக்கடன் ரத்து என்று பொய் கூறிய முதலமைச்சர், இனியும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம் எனவும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம் எனவும் சபதம் எடுத்துக்கொண்டனர்.

 

Advertisement:
SHARE

Related posts

மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

Ezhilarasan

தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

Halley Karthik

பாஜக தனிமனித கட்சி அல்ல: அண்ணாமலை பேட்டி

Gayathri Venkatesan