முக்கியச் செய்திகள் சினிமா

மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் செல்வராகவன்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து தனது நான்காவது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

மோகன் ஜி, செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அத்தோடு, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்கள் ஒரு தரப்பினர் மத்தியில் விமர்சனத்தையும், மற்றொரு தரப்பில் ஆதரவையும் பெற்ற நிலையில், அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு மோகன் ஜி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் பலி!

வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!

Nandhakumar

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.சாந்தா காலமானார்!

Niruban Chakkaaravarthi