முக்கியச் செய்திகள் தமிழகம்

சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்

சசிகலா அதிமுகவின் கொடியேற்றுவதும், கல்வெட்டில் பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்டுள்ளதும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.

அதிமுகவின் பொன் விழா ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை தி.நகர் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலா இன்று காலை வந்தார். அவரை அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்றனர். சசிகலா, எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். பிறகு அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில் ’கழக பொதுச்செயலாளர் சசிகலா’ எனவும் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்வெட்டில், பொதுச்செயலாளர் என சசிகலா பெயர் போடப்பட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போது, இது, சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அடிப்படையிலேயே சட்ட விதிமீறல், நீதிமன்ற விதி மீறல். தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்குள்ளாகும் செயல் என்றார்.

 

Advertisement:
SHARE

Related posts

அமேசான் பிரைமில் வெளியாகிறது மோகன்லாலின் பிரமாண்ட படம்!

Halley karthi

’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’: வைரலாகும் ’ஜகமே தந்திரம்’ டிரைலர்!

Halley karthi

நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!

Jayapriya