முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’மெட்டி ஒலி’ நடிகை திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

’மெட்டி ஒலி’ தொடர் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 40.

சேரன் இயக்கிய ’வெற்றிக் கொடிகட்டு’படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் உமா மகேஸ்வரி. உன்னை நினைத்து உள்பட சில படங்களில் நடித்த இவர், திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்தார். திருமுருகன் மனைவியாக இதில் நடித்த அவர் கேரக்டர் மிகவும் பிரபலமானது.

இந்த கேரக்டர் மூலம் பிரபலமான அவர், தொடர்ந்து நடித்து வந்தார். ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார். கால்நடை மருத்துவரான முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர், அதற்குப் பிறகு தொடர்களில் நடிக்கவில்லை .

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

சின்ன வயதிலேயே அவர் மரணமடைந்திருப்பது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!

Jayapriya

உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு!

Saravana Kumar

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி

Gayathri Venkatesan