ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில், பலத்த வெடி சத்தம் கேட்டதால், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பிரிவில், இன்று காலை பலத்த வெடிசத்தம் கேட்டுள்ளது.…

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில், பலத்த வெடி சத்தம் கேட்டதால், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பிரிவில், இன்று காலை பலத்த வெடிசத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன், அந்த பகுதியை போலீசார் சோதனை செய்தனர்.

மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜம்முவில் உள்ள நார்வால் பகுதியில், 5 கிலோ வெடி பொருட்களுடன் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.