முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட இவர் தற்போது H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் ராயப்புரத்தை சேர்ந்த விக்கி என்றும் நான் நடிகர் அஜீத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் அது வெறும் புரளி என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

“என் வெற்றியை விட மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வெற்றி முக்கியம்” – உதயநிதி

Gayathri Venkatesan

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. கேப்டன் வில்லியம்சன் டவுட்!

Ezhilarasan