கொதிக்கும் எண்ணையை பசு மேல் ஊற்றிய கொடூரம் !

மதுரையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மீது, மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு பேர் போன மதுரையில் கால்நடைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து…

மதுரையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மீது, மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு பேர் போன மதுரையில் கால்நடைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில், சாலையில் திரிந்த கால்நடைகள் மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்திவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ,அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றிதிரிந்த பசு மீது, மர்மநபர்கள் சூடான எண்ணெய் ஊற்றியுள்ளனர். இதனால் பசு மாட்டின் உடல்முழுவதும் காயங்கள் ஏற்பட்டு சுற்றிதிரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என விலங்குகள் நலத்துறை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.