தாய்லாந்து அரசரின் புகைப்படத்தை தீயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இசையமைப்பாளரும் தன்னார்வலருமான “அம்மி” கெய்பிபூன்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து அரசர் மகா வஜிரலோங்க்கார்ன், தனது கட்டுப்பாட்டில் இருந்து ராணுவத்தை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசரை அவமதிக்கும் வகையில் அவரது படத்தை எரித்த 10-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது இசையமைப்பாளரும் தன்னார்வலருமான “அம்மி” கெய்பிபூன்பன் பாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள அயுதயா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.







