பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று…

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கோவில் காளைகள், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளைகளை காளையர்கள் அடக்குவதற்கு மல்லுக்கட்டினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்க, பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிச் சென்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.