ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே உள்ள கிராமம் கிருங்காகோட்டை. இந்த கிராமத்தை சார்ந்த ஜெகதீஸ்வரன், கோபிநாத், அஜித்குமார் ஆகிய 3…

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே உள்ள கிராமம் கிருங்காகோட்டை. இந்த கிராமத்தை சார்ந்த ஜெகதீஸ்வரன், கோபிநாத், அஜித்குமார் ஆகிய 3 சகோதரர்களும் இந்திய  ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 3 சகோதரர்களும்  7 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர்.  ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வொரு பெயரிட்டு அழைப்பது வழக்கம். அதில், கரிகாலன் என்ற காளைக்கு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : நீருக்கடியில் நீண்ட முத்தம் – காதலர் தினத்தன்று கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி

இந்த பிறந்தநாளையொட்டி கரிகாலன் எனும் காளையை  அலங்கரித்து, கோயிலுக்கு அழைத்து சென்று ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வரவேற்றனர்.  இதன் பின்னர் கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினர். காளையை வீட்டில் ஒரு பிள்ளையாய் நினைத்து குடும்பமே இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த குடும்பத்தினர்  ஒவ்வொரு காளைக்கும் பிறந்தநாள் வரும்போது தங்களது வீட்டிற்குள் அதனை அழைத்து வந்து அதனை அழகுபடுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று இவர்களது ஜல்லிக்கட்டு காளைகளில் ஒன்றான கரிகாலனுக்கு ராணுவ சகோதரர்களின் குடும்பத்தினர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவலாகி வருவதோடு பலரின் பாராட்டை பெற்று உள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.