காதலர் தினத்தன்று நீருக்கடியில் மூழ்கி நீண்ட நேரம் முத்தமிட்டு இளம் காதல் ஜோடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உலகில் பல வகையான விநோதமான கின்னஸ் சாதனைகளை பல்வேறு நபர்கள் படைத்து வருகின்றனர். அந்த வகையில் நீருக்கடியில் நீண்ட முத்தம் கொடுத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனையை இளம் ஜோடி முறியடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் பெத் நீல். கனடாவை சேர்ந்தவர் மல்ஸ் கிளாடியர். அடிப்படையில் ஆழ்கடல் பயிற்சியாளர்களான இருவரும் காதலித்து விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இருவரும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட நினைத்தனர்.
அண்மைச் செய்தி: துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் – 40 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
அதன்படி நேற்று காதலர் தினத்தன்று பெத் நீலும், மைல்ஸும் நீருக்கடியில் 4 நிமிடங்கள் 6 நொடிகளுக்கு முத்தட்மிட்டு சாதனை படைத்துள்ளனர். இதற்காக இருவரும் பல நாட்களாக பயிற்சி எடுத்துள்ளனர். இருவரும் முத்தமிடும் வீடியோவை கின்னஸ் நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாக கின்னஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனை மூலம் ஏற்கெனவே 3 நிமிடங்கள் 24 நொடிகளுக்கு முத்தமிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இத்தாலி ஜோடியின் சாதனையை பெத் நீல் – மைல்ஸ் ஜோடி முறியடித்துள்ளனர்.







