ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்…

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் 2021 டிசம்பர் 8இல் ஜெய்பீம் படம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இருப்பதாகவும், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு சைதை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20இல் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.