போட்டித் தேர்வரா நீங்கள்…உங்களுக்குத்தான் இது!

கோவையில் வரும் மே 8ஆம் தேதி போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி முகாமை நியூஸ் 7 தமிழ் & கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்துகிறது. கல்லூரி முடித்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில்…

கோவையில் வரும் மே 8ஆம் தேதி போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி முகாமை நியூஸ் 7 தமிழ் & கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்துகிறது.

கல்லூரி முடித்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள குரூப் தேர்வுகளுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துவிட்டு, தீவிரமாக படித்து வருகின்றனர்.

இப்படி டிஎன்பிஎஸ் மற்றும் யுபிஎஸ்இ தேர்வுகளுக்காக படிக்கும் உங்களுக்கு நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியும், கிங் மேக்கர் ஐஏஎஸ் ஆகாடமியும் இணைந்து ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன. “பட்டறை – 2022” என்ற தலைப்பில் போட்டித் தேர்வுக்காக வழிகாட்டு நிகழ்ச்சி  மே 8ஆம் தேதி ( ஞாயிற்றுக் கிழமை) கோவை அவிநாசி சாலையிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.ஒருநாள் பயிற்சி முகாமில் தேர்வை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. உங்களுக்கான இடத்தை 9444227273 என்ற எண்ணுக்கு உடனே அழைத்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள். பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம், அனுமதி கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாகவே பயிற்சி வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.