ஈரோடு சுதா மருத்துவமனையில் 3-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

ஈரோடு சுதா மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் சுதா மகப்பேறு மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது.…

ஈரோடு சுதா மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் சுதா மகப்பேறு மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கோவை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகள் உள்ளன.

ஏற்கனவே சிறுமியிடம் கருமுட்டை தானம் பெற்ற வழக்கில் சுதா மகப்பேறு மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த வருமான வரி சோதனை 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.