திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை, கே எஸ் சி பள்ளி சாலை, மற்றும் பல குடோன் வீதி ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதியமான் முதல் தெரு பகுதியில் இருந்த குடோன் ஒன்றில் இருந்து, வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3டன் அளவிளான மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் கே எஸ் சி பள்ளி அருகே செயல்பட்டு வந்த குடோனில் அரை டன் அளவிலான செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்து மாநகராட்சி உரகிடங்கிற்கு, உரம் தயாரிப்பதற்கு அனுப்பி வைத்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2.5லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.
——–ரெ.வீரம்மாதேவி







