மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

செங்கல்பட்டு அருகே நெல் சேமிப்பு கிடங்கில், உரிய பாதுகாப்பு இல்லாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டத்தில், தற்காலிக நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று…

செங்கல்பட்டு அருகே நெல் சேமிப்பு கிடங்கில், உரிய பாதுகாப்பு இல்லாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டத்தில், தற்காலிக நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் இருந்து, கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள், பாதுகாப்பிற்காக வைக்கப்படுகின்றது.

இந்நிலையில், கன மழை பெய்த நேரத்தில், நெல் மூட்டைகளை அதிகாரிகள் பராமரிக்கவில்லை எனவும், நெல் மூட்டைகள் மீது சரிவர தார்பாய்கள் போடாததால், அவை மழையில் நனைந்து, முளைத்து வீணாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.