சென்னையில் வரும் 18ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள் ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி யுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என கூறினார்.
அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் 18ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப் பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளார்.
18ஆம் தேதி சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.








