வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சி

வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர்…

வெள்ளத்தில் இருந்து வீட்டை பாதுகாக்க ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால், மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.

இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டில் நீர் தேங்குவதை தவிர்க்க, அவற்றின் உயரத்தை அதிகரிக்க, தொழில்நுட்பம் அண்மைக்காலமாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. திருவொற்றியூர் கலைஞர் நகரில் வசிக்கும் ராமகிருஷ்ணன், தம்முடைய 1800 சதுர அடி வீட்டை, ஜாக்கி மூலம் 5 அடி உயரத்திற்கு தூக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

உயரத்தை தூக்கியவுடன் கீழே ஆழமாக தோண்டி, கான்கிரீட் கம்பிகள் போடப்பட்டு, ஏற்கனவே வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகளுடன் இணைத்து வெல்டிங் செய்யப்படும் எனவும், இதனால் கட்டிடம் பலமாக இருக்கும் எனவும் இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.