தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், விவசாய கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி…

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், விவசாய கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மேட்டூரில் இருந்து மனைவி உமா மற்றும் மகள் சுஷ்மிதா உடன் காரில் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பொன்னேரி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. வேகமாக சென்ற காரின் கதவு திறந்ததால் மனைவி உமா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதை தொடர்ந்து காரிமங்கலம் அருகேயுள்ள விவசாயி கிணற்றில் கார் விழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த பாலமேடு தீயணைப்புத்துறையினர் மீட்டுப்பணியில் ஈடுபட்டனர் . மேலும் கிணற்றில் நீர் நிரம்பி இருப்பதால் ராட்சத மோட்டர் மூலம் கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தந்தை மற்றும் மகளை உயிரிழந்த நிலையில் காருடன் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.