“இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடி!

இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் ஆட்சி குறித்தும், பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“கடந்த 11 ஆண்டுகளில் நமது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியைப் பொறுத்தவரை தன்னிறைவு பெறுதல் ஆகிய இரண்டிலும் தெளிவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.