இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம்…

இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரை பகுதியில் நேற்று நேற்று நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு கழகம் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் மேற்கு கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் பயங்கரவாதக் குழு ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த 3 பேர் மேற்கு கரையின் நப்லுஸ் நகரில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதன்படி அவர்கள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்து அவர்களை சரணடையுமாறு கேட்டுகொண்டோம். சரணடைய மறுத்த அவர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: நரபலி அச்சத்தால் தப்பி வந்த இளம்பெண் – போபால் காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த தாக்குதலில் 72 வயதுள்ள முதியவர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதி கட்டடங்கள் சேதமாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் 62 ஆக உயர்ந்துள்ளது. 10 இஸ்ரேலியர்களும் ஒரு உக்ரைன் சுற்றுலா பயணியும் இதே காலக்கட்டத்தில் பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.