விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 40 ரூபாய்க்கு சட்டவிரோதமாகக் குழந்தையை விற்பனை செய்த இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே ஈஸ்வரன் காலணியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் பஞ்சவர்ணத்திற்கு
ஏற்கனவே இரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் என 3 பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த
ஜனவரி 23ம் தேதி 4விதாக பிறந்த பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த மத்திய
கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஜார்ஜ்-ஐரின் தம்பதிக்கு 40 ஆயிரம்
ரூபாய்க்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இடைத்தரகர்களாக இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் முத்து மாரியம்மாள் அஜித்தா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மை செய்திகள்: 7கோடி ரூபாயை தாண்டிய பழனி தண்டாயுதபாணி கோவில் வருவாய்!
மேலும் குழந்தையின் பெற்றோரும், குழந்தையை வாங்கிய தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர். அதில் ஜார்ஜ் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் நான்கு பெண்களை மதுரை மத்தியச் சிறையிலும் பாண்டீஸ்வரன் விருதுநகர் மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .







