முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

ரூ.7 கோடியை தாண்டிய பழநி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் வருவாய்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்தத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், இதனால் கோயிலின் வருவாய் ஏழு கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக கோவிலின் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதை அடுத்து கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்து காணப்படுகின்றன . அவற்றை என்னும் பணி மூன்று நாட்களாக நடைபெற்று நிறைவடைந்ததாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ரொக்கமாக 7கோடியே 17லட்சத்து 42ஆயிரத்து 126ரூபாய் மற்றும் தங்கம் 1கிலோ 248கிராமும், வெள்ளி 48கிலோ ஆயிரத்து 277கிராமும், வெளிநாட்டு கரன்சி
2529நோட்டுகளும் வருவாயாகக் கிடைத்துள்ளது.

அண்மை செய்திகள்: திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!

மேலும் கோவிலின் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இப்பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

170 கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்

G SaravanaKumar

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Halley Karthik

ஷாருக் கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் : அதிகாரிகள் மறுப்பு

Halley Karthik