எல்.பி.ஜி. சிலிண்டர் தேவையுள்ள நிறுவனங்கள் இதை செய்யுங்க……….. HPCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…….!

எல்.பி.ஜி சிலிண்டர் தேவையுள்ள நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை பதிவு செய்து, 25 நாட்கள் பிறகே மீண்டும் சிலிண்டருக்கு பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் தற்போதைய புவிசார் அரசியல் இடையூறுகளினால், இந்தியாவிலும், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எல்.பி.ஜி விநியோகம் செய்யப்படுகிறது.

கட்டாய தேவை மற்றும் தன்மை அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கும் எல்.பி.ஜி சிலிண்டர் வினியோகம் செய்வது குறித்து எண்ணெய் விநியோக நிறுவன இயக்குனர்கள் முடிவு செய்வார்கள்.

இதற்காக எல்.பி.ஜி தேவையுள்ள நிறுவனங்கள் அவர்களது கோரிக்கைகளை, edlpg@bharatpetroleum.in,  indanecareho@indianoil.in, lpg.sbu.head@hpcl.in  ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.