This news Fact Checked by India Today
குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
நரேந்திர மோடியின் குவைத் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் செல்வது இதுவே முதல்முறை என்பதும் இந்தப் பயணம் தனிச்சிறப்பு. இந்நிலையில், மோடியின் பேச்சை கேட்க குவைத் மக்கள் வரவில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
முகப்புத்தகத்தில், “குவைத்தில் மோடியின் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது😂” கீழே காணலாம்.
இருப்பினும், இந்தியா டுடே நடத்திய விசாரணையில், வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டது தெரியவந்தது. பிரதமர் மேடை ஏறுவதற்கு முன் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, 2023ல் அவர் பேசிய ஆடியோவும் அதில் சேர்க்கப்பட்டது.








