எடப்பாடியும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பா? – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி?

டிடிவி தினகருடன் 50 ஆண்டுகள் பயணித்த கட்சியினர் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை திருநகர் பகுதியில் அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவிலிருந்து விலகி அனைத்து உறுப்பினர்களும் தவெகாவில் இணைந்து உள்ளனர்.

எடப்பாடியும், ஸ்டாலினும் சேர்ந்து பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது. பன்னீர்செல்வத்தை பற்றி குறை கூறிய டிடிவி தினகரன் அவரை முதலமைச்சராக முயற்சி செய்தார். டிடிவி தினகருடன் 50 ஆண்டுகள் பயணித்த கட்சியினர் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் இழந்துள்ளனர்.

எடப்பாடியும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்கள் கொடுத்த தீர்ப்பா? இதைவிட கேவலமான அரசியல் ஒன்றுமில்லை. டிடிவி தினகரனுக்கு எல்லாம் புரியும், அவர் காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் போவது போல் செல்கிறார். கரூர் சம்பவத்தின் உயிரிழப்புகள் எஸ்பி க்கு தெரியவில்லை. ஆனால் முதலில் செந்தில் பாலாஜி வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நாங்கள் தான் தகவல் கூறினோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.