5-வது டி20 போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு!

5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வியுற்றது. கடைசியாக நடைபெற்ற 4 ஆவது டி 20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்திற்கு இந்திய அணி வீரர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.