முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

’தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள்’: ஆப்கான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தகவல்

தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவர்கள் என்பதால் அதற்கு தடை விதிக்க மாட்டார் கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் உமேஷ் பட்வால் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றனர். காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்ததுமே அதிபர் அஷ்ரப் கனி, அங்கிருந்து தப்பிவிட்டார். இப்போது அங்குள்ள மக்கள், அண்டை நாடுகளுக்கு செல்லத் தயாராகி வருகின்றனர். ஆனால், நாட்டில் அமைதியை விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. இங்கிலாந்தில் ’த ஹண்ட்ரட்’ என்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்தத் தொடர் 21 ஆம் தேதி முடிவடைகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தனது குடும்பத்தை நினைத்து ரஷித்கான் கவலைப் படுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர், கெவின் பீட்டர்சன் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் இனி தொடருமா? தலிபான்கள் அதற்கு அனு மதிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலிக்தத் நூரி கூறும்போது, தலிபான்கள் ஆட்சி செய்த காலத்தில்தான் ஆப்கான் விளையாட்டு கமிட்டியில் கிரிக்கெட் பதிவு செய்யப்பட்டது. தலிபான்கள் தலைமையில் கிரிக்கெட் விளையாட்டு சிறப்பாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கான் கிரிக்கெட் அணியில் 2010 முதல் 2018 ஆம் வருடம் வரை பேட்டிங் பயிற்சியாள ராக இருந்த உமேஷ் பட்வால், ‘ரஷித்கான், முகமது நபி, ஹஸ்ரத்துல்லா ஸசாய், ஷின்வாரி ஆகியோருக்கு மெசேஜ் அனுப்பினேன். யாருடைய குடும்பமும் ஆபத்தான நிலையில் இல்லை. காபூலில் பலமுறை இருந்துள்ளேன். தலிபான்கள் கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வீரர்களையும் விரும்புபவர்கள்தான்’ என்கிறார்.

இதையேதான் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் மற்றொரு பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புத்தும் சொல்கிறார். ‘ஆப்கானின் மிகப்பெரிய விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். அந்நாட்டு மக்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருவது இந்த விளையாட்டு. தலிபான்கள் அதற்கு தடை விதிக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். அந்த அணியின் வீரர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். அவர்களும் நம்பிக்கையுடனே இருக்கிறார்கள் என்கிறார். இவர் 2016-17 ஆம் ஆண்டுகளில் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர்.

இதற்கிடையே கடந்த புதன்கிழமை, இலங்கை வீரர் அவிஸ்கா குணவர்த்தனேவை பேட்டிங் பயிற்சியாளராக ஆப்கான் கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. ஆப்கானில் நடக்கும் நிலவரங்களை கவனித்து வருவதாகவும் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

Advertisement:
SHARE

Related posts

நடிகரின் காரில் மோதிய போதை இளைஞர் சீரியஸ்

Ezhilarasan

’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!

Halley karthi

ரூ.400-க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் 20 கோடி இந்தியர்கள்!

Ezhilarasan