தாம்பரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கல்லூரி மாணவன் உயிரிழப்பு!

தாம்பரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார்.

சென்னை கிழக்கு தாம்பரம் ஐ.ஏ.எப் சாலை, ப்ரொபசர் காலனி அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர் ஜனார்தனன் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி ஆண்ட்ரியா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சாலையில் திரும்பிய போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஜனார்தனன் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்து பலத்த காயமடைந்தனர்.

அப்போது மயக்கத்தில் இருந்த ஆண்ட்ரியாவிற்க்கு திடிரென வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். மேலும் பலத்த காயமடைந்த ஜனார்தனன் மற்றும் சஞ்சய் மீட்கபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ள நிலையில் ஜனார்த்தனன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.