தவெக சார்பில் இன்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக தவெக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல்கட்டமாக நடந்த நேர்காணலில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்து இருந்தார். நேற்று 2-வது கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில் இதுதொடர்பான முடிவை கட்சி தலைவர் விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் போட்டியிடப்போவதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிகளை நேரடியாக மேற்கொள்ள கொடுங்கையூரில், தவெக தேர்தல் அலுவலகத்தை அமைத்து வருகிறது. இந்த நிலையில் தவெக சார்பில் மாமல்லபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.