தனுஷ், செல்வராகவன் இணையும் படத்தின் ஷூட்டிங், நாளை தொடங்குவதாக இருந்த நிலையில், தள்ளிப்போய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர் ராஜா இணையும் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு
உண்டு. அவர்களை இணந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை
உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் செல்வராகன், தனுஷுடன் கடைசியாக, ’மயக்கம் என்ன’ படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.
இதையடுத்து தனுஷை மீண்டும் இயக்க இருப்பதாக செல்வராகவன் கூறி வந்தார்.
இந்நிலையில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்
வெளியானது.
படத்துக்கு’நானே வருவேன்’என்று பெயரிடப்பட்டது. இதற்கிடையே, இந்தப் படத்தின்
ஷூட்டிங், ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு
தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங், நாளை தொடங்கவில்லை என்றும் ஒரு மாதம் தள்ளிப் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு செல்வராகவன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.








