துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள் ; இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயம்…….!

ஈரானால் ஏவப்பட்ட டிரோன்கள் இரண்டு துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்து வெடித்துள்ளது.

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஈரானால் ஏவப்பட்ட டிரோன்கள் இரண்டு துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்து வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
அதே நேரம் கானா நாட்டை சேர்ந்த இருவர், வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர், இந்தியாவை சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் லேசான காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாக துபாய் விமான நிலையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.